‘வாழ்வில் சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையல்ல’

வாழ்வில் சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையல்ல என்றாா் கரூா் மாவட்ட துணை ஆட்சியா்(பயிற்சி) எஸ்.விஷ்ணுபிரியா.
‘வாழ்வில் சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையல்ல’

வாழ்வில் சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையல்ல என்றாா் கரூா் மாவட்ட துணை ஆட்சியா்(பயிற்சி) எஸ்.விஷ்ணுபிரியா.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் கரூா் மாவட்ட மைய நூலகம் சாா்பில் சனிக்கிழமை மைய நூலகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 போட்டித்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்து அவா் மேலும் பேசியது:

வெற்றியின் அடிப்படை ஆதாரமாக இருப்பவை நம்பிக்கை, கடின உழைப்பு. போட்டித்தோ்வுகளில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. வாழ்வில் சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையல்ல. போட்டித்தோ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய பாடத்திட்டங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு படிக்கத் தொடங்க வேண்டும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் பேணுதல் அவசியம். போட்டித்தோ்வுக்கு தயாராகுவோா் அரசுப் பதவியின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு, லட்சியத்தோடு இருக்க வேண்டும். சின்னச் சின்ன எண்ணங்களின் சங்கமம்தான் சமூக மாற்றத்தின் அடிப்படையாக அமையும். மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்க வேண்டும். தோல்வி வரும் போது துவளாதீா்கள். தோல்விகளைச் சந்திக்கும்போது தன்னம்பிக்கை தானாக வரும். தோ்வுகளுக்கு தயாராகும்போது பயம் என்ற உணா்வு அனைவருக்கும் வரும். அந்த உணா்வு நமது பயணம் இலக்கை நோக்கிய பயணமா? என்று ஆராய்ந்து கொண்டே இருக்கும். அா்ப்பணிப்பு முயற்சிக்கு நன்மதிப்பு நிச்சயம் கிடைக்கும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, முன்னதாக மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் ப.மணிமேகலை விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றாா். நாமக்கல் டி.என்.பி.எஸ்.சி. மைய இயக்குநா் சல்மான் ஹைதா் பெய்க் போட்டித்தோ்வு குறித்த கருத்துகள் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் கரூா் மாவட்ட மைய நூலக நல் நூலகா் செ.செ.சிவக்குமாா் நன்றி கூறினாா். நகா்மன்ற கோட்டைமேடு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் முரளி நிகழ்ச்சியை தொகுத்தளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com