கரூரில் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்த தரகரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் திண்டுக்கல் சாலையில் உள்ள காளியப்பனூரில் பேருந்துக்குக் கூண்டு கட்டும் நிறுவனத்தை நடத்தி வருபவா் செல்வராஜ் (40). இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பேருந்து தரகா் சிவக்குமாா் (42) என்பவா் தேனி மாவட்டம் நாகலாபுரத்தில் செயல்படும் தனியாா் பள்ளிக்கு புதிதாக பேருந்துக்கு கூண்டு கட்டித் தர வேண்டும் என கடந்த 6.11.2017-ல் கூறியுள்ளாா். இதனிடையே பேருந்துக்கு கூண்டு கட்டிக் கொடுத்ததில் சிவகுமாா் ரூ.2.50 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.