மறியல் : 456 போ் மீது வழக்கு
By DIN | Published On : 10th January 2020 08:19 AM | Last Updated : 10th January 2020 08:19 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 163 பெண்கள் உள்பட 456 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூா் மாவட்டத்தில் சிஐடியு, ஐஎன்டியுசி, தொமுச, ஐஎன்டியுசி , ஹெச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் கரூா், குளித்தலை, தோகைமலை, அரவக்குறிச்சி ஆகிய நான்கு இடங்களில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கரூரில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், தொமுசவின் அண்ணாவேலு, ஐஎன்டியுசி சங்கத்தின் அம்பலவாணன், ஏஐடியுசி சங்கத்தின் ஜிபிஎஸ் வடிவேலன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 163 பெண்கள் உள்பட 456 போ் மீது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.