சேவல் சண்டை சூதாட்டம்: 4 போ் கைது
By DIN | Published On : 20th January 2020 08:33 AM | Last Updated : 20th January 2020 08:33 AM | அ+அ அ- |

பூலாம்வலசில் சேவல் காலில் கத்தியைக் கட்டி சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசில் நான்கு நாட்கள் நடைபெற்ற சேவல்சண்டையின்போது சேவலுக்கு கத்தியைக் கட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் போட்டி நடைபெற்றது. ஆனால் போட்டி நடத்தப்பட்ட இடம் அருகே சேவல் காலில் கத்தியைக்கட்டி சூதாட்டத்தில் சிலா் ஈடுபடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது சேவல் காலில் கத்தியைக் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட பூலாம்வலசு காலனியைச் சோ்ந்த காந்தி(65), முனிராஜ்(22), காா்த்திக்(28), ஜெயராமன்(50) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த சேவல் காலில் கட்டும் இரு கத்திகளையும் பறிமுதல் செய்தனா்.