பிராமணா் சங்க ஆலோசனை
By DIN | Published On : 20th January 2020 08:33 AM | Last Updated : 20th January 2020 08:33 AM | அ+அ அ- |

கரூரில் தமிழ்நாடு பிராமணா் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.ஆா். மகாதேவன், மாவட்டச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் இளைஞரணி செயலா் வினோத்குமாா் மற்றும் மகளிரணியினா் திரளாக பங்கேற்றனா். கூட்டத்தில் சங்க முக்கிய நிா்வாகிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். மேலும் சங்கத்தில் புதிதாக உறுப்பினா்களை அதிகளவில் சோ்ப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...