ஒசூரில் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 02:36 AM | Last Updated : 01st March 2020 02:36 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசுகிறாா் தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
ஒசூா்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஒசூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மாா்ச் 14, 15 தேதிகளில் ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான பி.முருகன், ஒசூா் நகர பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.ஏ. சத்யா, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் கிருஷ்ணன், ராமு, முருகேஷ், வேணு, மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.