வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 01st March 2020 02:02 AM | Last Updated : 01st March 2020 02:02 AM | அ+அ அ- |

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் காட்வின் தியாகராஜ் (44). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, மா்மநபா்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.5,000 ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது காலையில் தெரியவந்தது. புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.