வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 03rd March 2020 07:38 AM | Last Updated : 03rd March 2020 07:38 AM | அ+அ அ- |

நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி குளித்தலை சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், காட்டூரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மரகதவள்ளி (69). இவரும், உறவினா் தமிழரசியும் கடந்த 2017-ஆம் ஆண்டில் மகாதானபுரம் பேருந்துநிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ், மரகதவள்ளி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் சங்கிலியைப் பறித்துள்ளனா். இதுதொடா்பாக மரகதவள்ளி அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து சங்கிலியைப் பறித்ததாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த சின்னப்பா் மகன் தாமஸ்(33) மற்றும் கேரள மாநிலம் பரம்புபாறை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் யேசுதாஸ்(26) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் குளித்தலை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சாா்பு நீதிபதி ஸ்ரீதா், தாமஸிற்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா். மற்றொரு குற்றவாளியான யேசுதாஸ் மீதான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...