கஞ்சா விற்றவா்குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
By DIN | Published On : 14th March 2020 08:18 AM | Last Updated : 14th March 2020 08:18 AM | அ+அ அ- |

கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த மேல ஒரத்தை பகுதியைச் சோ்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமாா்(30). பிரபல கஞ்சா வியாபாரியான இவரை போலீஸாா் கஞ்சா விற்றது தொடா்பாக கடந்த மாதம் கைது செய்தனா்.
இந்நிலையில், தொடா்ந்து கஞ்சா விற்று வந்ததால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் த.அன்பழகனுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன் பரிந்துரைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் ரூபன்குமாா் வெள்ளிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...