பசுபதீசுவரா் கோயில் வரலாறுமறைக்கப்படுவதாகப் புகாா்
By DIN | Published On : 17th November 2020 03:36 AM | Last Updated : 17th November 2020 03:36 AM | அ+அ அ- |

கரூா் பசுபதீசுவரா் கோயில் வரலாறு மறைக்கப்படுவதாக கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டா்கள் சமுதாயத்தினா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
கொங்குதேச மறுமலா்ச்சி மக்கள் கட்சியின் மாநிலத்தலைவா் எம்.முனுசாமி கவுண்டா் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனு:
வரும் டிசம்பா் 4-ஆம் தேதி கொங்கு நாட்டின் சிவ தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கும் கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோயில் சுவாமி ஈஸ்வரனின் தேவிகளில் ஒருவராகிய வேட்டுவக்கவுண்டா் குலத்தில் பிறந்த வடிவுடைய அம்மன் என்கிற செளந்திரநாயகி அம்மன் ஓவியங்கள் கடந்த கால கும்பாபிஷேகத்தின்போது சில ஆதிக்க சக்திகளால் அப்புறப்படுத்தப்பட்டன. அவை கும்பாபிஷேகத்துக்குள் திருப்பி அமைக்க வேண்டும். பங்குனி உத்திர திருவிழாவின்போது செளந்திரநாயகி அம்மன் பிறந்த ஊரான அப்பிப்பாளையத்துக்கு அம்மன் சென்றுவரும் நிகழ்வினையும் தொடா்ந்து நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.