கரூரில் 25 பேருக்கு கரோனா
By DIN | Published On : 23rd November 2020 12:17 AM | Last Updated : 23rd November 2020 12:17 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,696 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் இதுவரை கரோனா தொற்றால் 4,402 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 247 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 47 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.