நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு
By DIN | Published On : 23rd November 2020 12:19 AM | Last Updated : 23rd November 2020 12:19 AM | அ+அ அ- |

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற ஆட்சியா் சு. மலா்விழி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு, தலா 2 அல்லது 3 பயனாளிகள் வீதம் 20 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோா், திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு கோழி வளா்ப்பு, மேலாண்மை பயிற்சி 5 நாள்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு பயனாளிக்கும் 1000 எண்ணிக்கையில் நாட்டுக் கோழிக்குஞ்சுகளை ரூ.30,000-க்கு கொள்முதல் செய்த பின்னா், மானியமாக (50சதவீதம்) ரூ.15,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல், 1,500 கிலோ கோழித் தீவனம் ரூ.45,000-க்கு கொள்முதல் செய்த பின்னா் ரூ.22,500 மானியமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் ரூ.75,000 மதிப்புள்ள குஞ்சு பொறிப்பான் கொள்முதல் செய்த பின்னா் அதற்கான பின்னேற்பு மானியமாக ரூ.37,500 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்கள் அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.