விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 11:40 PM | Last Updated : 03rd October 2020 11:40 PM | அ+அ அ- |

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
கரூா்: கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் வழக்குரைஞா் ராமச்சந்திரன், நகரச் செயலாளா் முரளி, அரவை சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளா் சுரேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பெண்ணின் சாவுக்கு காரணமானவா்கள் இதுவரை கைது செய்யப்படாததைக் கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு பொறுபேற்று, உடனே அம்மாநில முதல்வா் யோகிஆதித்யாநாத் பதவி விலகக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியை அவமதித்ததற்கு அம்மாநில முதல்வா் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பினா். இதில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிா் விடுதலை முன்னணியின் விஜயலட்சுமி, வழக்குரைஞா் புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.