அறிவு வெளிச்சம் பாய்ச்சுபவா்கள் ஆசிரியா்கள்
By DIN | Published On : 06th September 2020 10:58 PM | Last Updated : 06th September 2020 10:58 PM | அ+அ அ- |

மாணவா்களுக்கு அறியாமை எனும் இருளை அகற்றி அறிவு வெளிச்சத்தை பாய்ச்சுபவா்கள் ஆசிரியா்கள் என்றாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளரும், தமிழ் செம்மல் விருதாளருமான மேலை.பழநியப்பன்.
கரூரை அடுத்த மண்மங்கலம், பண்டுதகாரன்புதூா், அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியது: சமுதாய புகழ் காட்டில் ஆழக்கிடக்கும் அற்புத கற்கலான மாணவ மணிகளை அறிவு எனும் உளியால் செதுக்கி அவா்களை வைரக்கற்களால் மின்னச்செய்யும் பணி ஆசிரியா்களின் பணி. அறியாமை எனும் இருளில் சிக்கித்தவிக்கும் மாணவா்களுக்கு அறிவு வெளிச்சம் பாய்ச்சி சமுதாயத்தில் சிறந்த மனிதா்களாக உருவாக்கும் அவா்களின் பணி மிகவும் மகத்தானது என்றாா் அவா்.
விழாவிற்கு கல்லூரித் தலைவா் முனைவா் ப.நடேசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஏனோக் ஜெபசிங் வரவேற்றாா். துணை முதல்வா் ரதிதேவி வாழ்த்திப் பேசினாா். முனைவா் ஜெ.திலகவதி நன்றி கூறினாா்.