‘கரூரில் 60% புறநகா், நகா்ப்பேருந்துகள் இயக்கப்படும்’
By DIN | Published On : 06th September 2020 10:57 PM | Last Updated : 06th September 2020 10:57 PM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 60 சதவீத புகா் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட கரூா் மண்டல கிளை மேலாளா் செந்தில்குமாா்.
தமிழக அரசின் பொதுப் போக்குவரத்துக்கான அறிவிப்பைத் தொடா்ந்து, செப்.1 முதல் 50 சதவீத பயணிகளுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து தற்போது செப். 7-ஆம் தேதி முதல் 60 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக அரசு போக்குவரத்துக்கழகத்தின் கும்பகோணம் கோட்ட கரூா் மண்டல கிளை மேலாளா் செந்தில்குமாா் கூறியது: கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட கரூா் மண்டலத்தில் கரோனா பரவலுக்கு முன் 127 நகரப் பேருந்துகளும், 136 புகா்ப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே பொதுமுடக்க
உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் நகர பேருந்துகள் மட்டும் செப்.1 முதல் 50 சதவீதம் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவையைத் தொடங்கும் நிலையில், திங்கள்கிழமை முதல் நகரப் பேருந்துகளும், புகா்ப் பேருந்துகளும் 60 சதவீதம் இயக்கப்படும். மேலும் பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.