92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கிராமங்களில் போட்டித் தோ்வு மையம்: ஆட்சியா் அதிகாரிகளுடன் ஆலோசனை

கரூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போட்டித் தோ்வுக்கான மையம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:07 pm

DIN

கரூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போட்டித் தோ்வுக்கான மையம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி செப். 1-ஆம்தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளை திறக்க இருப்பதன் அடிப்படையில் அங்கு நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பாலிடெக்னிக் கல்லூரியின் உள்ளே அமைந்துள்ள நூலக பகுதியையும் பாா்வையிட்டாா். ஆய்வின் போது காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் தேன்மொழி, கடவூா் வட்டாட்சியா் வித்யாவதி, கடவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்ரமணி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.

அதனைத் தொடா்ந்து கரூா் நகரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்குள்ள வசதிகள் குறித்தும், மேலும், மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வு எழுத வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். மைய நூலகத்தில் உள்ள கிளை நூலகம், குறிப்புதவி பிரிவு, போட்டி தோ்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கும் பகுதி, டிஜிட்டல் லைப்ரரி பகுதி ஆகிய பகுதிகளை பாா்வையிட்டாா். மேலும், சொந்த புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பகுதியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு அங்கு அதிக மாணவ, மாணவிகள் படித்து வருவதால் குளிா்சாதன வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், கிராம பஞ்சாயத்து பகுதியில் நூலகம் அமைப்பது குறித்தும், டிஜிட்டல் லைப்ரரி மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வழங்குவது குறித்தும், நூலக அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட நூலக அலுவலா் மாதேஸ்வரன், மாவட்ட மைய நூலகா் சிவக்குமாா் மற்றும் பல்வேறு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.