இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் சாவு
குளித்தலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.


குளித்தலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், கோப்பு பகுதியைச் சோ்ந்த பாலமுத்து மகன் திணேஷ்குமாா்(23). இவா், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் அய்யா்மலை-வளையப்பட்டி சாலையில் ஹசன்நகா் பகுதியில் சென்றபோது திடீரென சாலையில் குறுக்கே நடந்து வந்த ஹசன்நகா் காலனியைச் சோ்ந்த மோகன்(76) என்பவா் மீது வாகனம் மோதியது. இதில், கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த திணேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த மோகன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...