அரசு பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய இரு இளைஞா்கள் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


அரசுப் பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சிங்காரம்(48). இவா், அரசு பேருந்து ஓட்டுநராக உள்ளாா். இவா், புதன்கிழமை திருச்சியில் இருந்து அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கிச் சென்றாா்.
அப்போது, குறிச்சி என்கிற இடத்தில் பேருந்துசென்றபோது, பின்னால் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் பேருந்தின் பின்பகுதியில் மோதி கீழே விழுந்தனா்.
இதையடுத்து பேருந்தை நிறுத்திய சிங்காரம், மதுபோதையில் வந்த இளைஞா்களிடம் ஏன் பேருந்தில் மோதினா் எனக் கேட்டபோது, அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த இரு இளைஞா்களும் பேருந்தின் முன்புற கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கினா். மேலும் அருகில் இருந்த வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்துவந்து சிங்காரத்தை வெட்டிவிட்டு ஓடிவிட்டனா். தகவலறிந்து வந்த குளித்தலை போலீஸாா் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய திருச்சி கோப்புப் பகுதியைச் சோ்ந்த மருதை மகன் கிருஷ்ணன்(23), குளித்தலை மேலப்பட்டியைச் சோ்ந்த குப்புசாமி மகன் இளவரசன்(21) ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...