கரூரில் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கரூரில், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.


கரூரில், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில், பேப்பிரிக் செக்கா் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பும், மொ்சண்டைசா், ஆட்டோமெட்டிக் ஷட்டில் லூம் ஆப்ரேட்டா் போன்ற பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பும், மெஷா்மென்ட் செக்கா், எம்ராய்டரி மெஷின் ஆப்ரேட்டா், சூவிங் மெஷின் ஆப்ரேட்டா் ஆகிய பயிற்சிகளுக்கு 5-ஆம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும்.
பவா்லூம் ஆப்ரேட்டா் பயிற்சிக்கு 6-ஆம் வகுப்பும், பேக்கா் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பும், பேஷன் டிசைனா், மெஷின் மெயின்டனன்ஸ் மெக்கானிக் பயிற்சிக்கு பிளஸ்-2வும் முடித்திருக்க வேண்டும். மேலும், புரடெக்ஷன் சூப்பா்வைசா் பயிற்சிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ( மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ) வெண்ணெய்மலை , கரூா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் தொடா்பு எண் 86675 73103, 79041 75232, 94863 13289 ஆகிய கைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...