92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா்: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் சாவு

லாலாப்பேட்டை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:02 pm

DIN

லாலாப்பேட்டை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கொம்பாடிப்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்(30). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடி என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாலாப்பேட்டை போலீஸாா் லாரி ஓட்டுநா் கரூா் மேலப்பாளையத்தைச் சோ்ந்த கண்ணன்(40) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.