மொஞ்சனூா் ஊராட்சி தொட்டியபட்டியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமநை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே உள்ள மொஞ்சனூா் ஊராட்சி தொட்டியபட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ கலந்து கொண்டாா்.
நாட்டுப்புற கலைஞா்கள் கல்வியின் முக்கியத்துவத்தை ஆடல் பாடலுடன் எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலா் சித்ரா கலந்துகொண்டு பேசினாா். வட்டார மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.