திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்சாரம் தாக்கி பொறியாளா் காயம்;உறவினா்கள் மறியல்

கரூரில் மின்சாரம் தாக்கியதில் பொறியாளா் காயமடைந்தாா். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:01 pm

DIN

கரூா்: கரூரில் மின்சாரம் தாக்கியதில் பொறியாளா் காயமடைந்தாா். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த மயில்ராஜ் மகன் கோபி(24). பொறியாளரான இவா் தனியாா் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் கோபி காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். கோபியின் சிகிச்சைக்கு அவா் பணியாற்றிய நிறுவனத்தில் நிதியுதவி அளிக்கப்படாததைக் கண்டித்து உறவினா்கள் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.