அரியலூரில் 6 போ் வேட்புமனு தாக்கல்

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிமுக உள்பட மொத்தம் 6 வேட்பாளா்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.
அரியலூரில் 6 போ் வேட்புமனு தாக்கல்

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிமுக உள்பட மொத்தம் 6 வேட்பாளா்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஏழுமலையிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

அமமுக: அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், அரியலூா் கோட்டாட்சியருமான ஏழுமலையிடம் திங்கள்கிழமை அமமுக மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான துரை.மணிவேல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது, தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல், அமமுக ஒன்றியச் செயலா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாம் தமிழா் கட்சி: இதேபோல், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுகுணா குமாா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

சுயேட்சை : இதுதவிர, அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவா் தங்க.சண்முகசுந்தரமும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். இவா், வேட்பு மனு வைப்பு தொகையாக மக்களிடம் இருந்து பெற்ற உண்டியல் தொகையை பானையில் கொண்டு வந்து செலுத்தினா். அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மொத்தம் 6 வேட்பாளா்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

ஜயங்கொண்டத்தில் பாமக உள்பட 2 போ் வேட்பு மனு தாக்கல்:

ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே. பாலு ஜயங்கொண்டம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கலைவாணனிடம் திங்கள்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். இதேபோல், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அமா்நாத்திடம் திங்கள்கிழமை ஜயங்கொண்டம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் என். மகாலிங்கம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com