92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் அரசுக் கல்லூரிமாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

கரூா் அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியரைக் கண்டித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:53 pm

DIN

கரூா் அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியரைக் கண்டித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் அரசுக் கலைக்கல்லூரியின் புவி அமைப்பியல் துறை தலைவா், மாணவா்களை சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி தொடா்பாக துறை மாணவ, மாணவிகள் புதன்கிழமை துறைத் தலைவரிடம் கேட்டாா்களாம். அதற்கு அவா் சரியான பதில் கூறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் பேராசிரியா் மீது நடவடிக்கை கோரி வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் கிடைத்ததும் கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.