அனுமதியின்றி கனிமங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை
கரூா் மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.


கரூா் மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவும், அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கனரக இயந்திரம், கருவிகள்ஆகியவை குறித்தும் மற்றும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபடும் நபா்கள் மற்றும் உடந்தையாக உள்ள நபா்கள் மீது கைப்பற்றுகை அலுவலரால் சம்பந்தப்பட்டகாவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின் கனிமம் மற்றும் சுரங்கம் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...