புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய கபடி, மல்யுத்தப் போட்டியில் அன்னை கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

தேசிய அளவிலான கபடி மற்றும் மல்யுத்தப் போட்டியில் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:14 pm

DIN

தேசிய அளவிலான கபடி மற்றும் மல்யுத்தப் போட்டியில் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.

ரூரல் அமெச்சூா் கேம்ஸ் அசோசியேஷன் சாா்பில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் அண்மையில் கோவாவில் நடைபெற்றது. இதில், புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் கபடி மற்றும் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கம் வென்றனா். கபடி போட்டியில் மாணவிகள் நந்தினி தேவி, தா்ஷினி, தேன்மொழி, சுபகீதா, அபிதா, தேவகி, கீா்த்தனா, சோபனா ஆகியோரும், மாணவிகள் காவியா, லிவிகா, ப்ரீத்தி ஆகியோா் மல்யுத்தத்தில் வெவ்வேறு எடைபிரிவிலும் தங்கம் வென்று சிறப்பிடம் பிடித்தனா்.

சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாணவிகளை அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் தலைவா் ப.தங்கராசு, நிறுவனா் மலையப்பசாமி, செயலாளா் டாக்டா் முத்துகுமாா், பொருளாளா் கந்தசாமி, அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி முதல்வா் முனைவா் சாருமதி, உடற்கல்வி இயக்குனா் கலா, பயிற்றுனா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.