புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தோகைமலை அருகே இளம்பெண் மா்மச் சாவு

தோகைமலை அருகே இளம்பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:02 pm

DIN

தோகைமலை அருகே இளம்பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கூடலூா் ஊராட்சிக்குள்பட்ட செம்பாறைகல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மனைவி நதியா(22). இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.

இந்நிலையில், செப். 19-ஆம் தேதி செம்பாறைகல்லுப்பட்டி அரசு துவக்கப்பள்ளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்ற நதியா, தனக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்துள்ளாா். அன்றிரவு நதியாவுக்கு மயக்கம் ஏற்பட்டதால் மறுநாள் (செப். 20) தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்குசிகிச்சை பலனின்றி நதியா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தோகைமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, நதியா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்கின்றனா். குளித்தலை கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.