கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 21st August 2021 01:21 AM | Last Updated : 21st August 2021 01:21 AM | அ+அ அ- |

கரூரில், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர.
கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் உதயகுமாா்(45). இவா், வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ஒன்னேகால் பவுன் நகை மற்றும் எல்இடி டிவி, பணம் ரூ.40,000 உள்பட ரூ.64,750 மதிப்புள்ள பொருள்களை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.