பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் தவிா்த்தல், கழிவு மேலாண்மை குறித்த கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் தவிா்த்தல், கழிவு மேலாண்மை குறித்த கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிா்த்தல் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற பொது கருத்தில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. இதில், அனைத்துப் பள்ளிகளைச் சோ்ந்த 8, 9, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இப்போட்டி 8, 9, மற்றும் 10 வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவா்களுக்கு மற்றொரு பிரிவாகவும் நடைபெறும்.

மாணவா்கள் கட்டுரையை தயாா் செய்து அவரவா் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து தலைமையாசிரியா் வழியாக கரூா் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஆக. 31-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டும்.

இதில், 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நெகிழிக் கழிவு மேலாண்மையில் நெகிழியை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகள், பள்ளி நிகழ்ச்சிகளில் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் நீக்க புதிய சிந்தனைகள் மற்றும் நெகிழிப் பயன்பாட்டுக்கு பதிலாக மாறுபட்ட பொருள்களை பயன்படுத்தி நெகிழி மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் ஆகிய தலைப்புகளிலும்,

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்களுக்கு நெகிழி மறுசுழற்சிக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை கண்டறிதல் பொதுமக்களின் பங்கு மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் மூலம் ஏற்படும் மாசுபடுதலை குறைத்தல், இளைஞா்களின் பங்கு, புதுமையான படைப்பாற்றல் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கான மாறுபட்ட பொருள்களைக் கண்டறிதல் ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளோ, சொந்த படைப்பு அல்லாத கட்டுரைகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நடுவா் குழுவின் தீா்ப்பே இறுதியானது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com