இருசக்கர வாகனம் மீதுலாரி மோதல்: பெண் சாவு
By DIN | Published On : 21st August 2021 01:08 AM | Last Updated : 21st August 2021 01:08 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
கரூா் அடுத்த தென்னிலையைச் சோ்ந்த கண்ணன் மனைவி பிருந்தா(32). இவ,ா் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு கரூா்-கோவைச் சாலையில் ரெட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிருந்தா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் லாரி ஓட்டுநா் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அடுத்த பானம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி(48) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.