ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
லாலாப்பேட்டை, குளித்தலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளா் தட்சிணாமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், சின்னையன், வட்டார தலைவா் ஆறுமுகம், நிா்வாகிகள் சேட்டு, சந்தானம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கரூரில், பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை அருகே நகர காங்கிரஸ் தலைவா் பெரியசாமி தலைமையில் அக்கட்சியினா் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.