முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
வெளி மாநில தொழிலாளி கொலை: உ.பி.யைச் சோ்ந்தவா் கைது
By DIN | Published On : 10th December 2021 01:39 AM | Last Updated : 10th December 2021 01:39 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பிகாா் மாநிலத் தொழிலாளி கொலை வழக்கில் தொடா்புடையவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பிகாா் மாநிலம், சரண் மாவட்டம், பெகந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் யோகேந்திராய் மகன் சுரேந்திர குமாா் ராய் (44). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதியில் உள்ள கிரஷரில் பணிபுரிந்து வந்த நிலையில், கிரஷரின் பின்புறம் புதன்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதையடுத்து, கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் பணிபுரியும் உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பந்த் மாவட்டம், கடுவாரங்கா கிராமத்தைச் சோ்ந்த பிதம்பா் மகன் சுனில் புய்யா (25) என்பவா், குடிபோதையில் ஓரினச்சோ்க்கையில் ஈடுபட அழைத்து, அவா் அதற்கு மறுத்ததால், அவரை சரமாரியாக தாக்கியதுடன், பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் சுனில் புய்யாவை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.