அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாமன்னா் ராசேந்திரன் சோழன் பெயரை சூட்டக் கோரிக்கை

 அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாமன்னா் ராசேந்திர சோழன் பெயரை சூட்ட வேண்டும் என்று ஜயங்கொண்டம் ஒன்றியக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாமன்னா் ராசேந்திர சோழன் பெயரை சூட்ட வேண்டும் என்று ஜயங்கொண்டம் ஒன்றியக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், ஒன்றிய உறுப்பினா்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடியால் ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ள அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ஆசியா கண்டத்தை ஆண்ட மாமன்னா் ராசேந்திரன் சோழன் பெயரை சூட்ட வேண்டும். நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தண்டலை கிராமத்தில் மின்சார வாரியம் அமைப்பதற்காக இரண்டு ஏக்கா் நிலம் வழங்குவது என்பன உள்ளிட்ட 19 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பிருதிவிராஜன், சிவகுமாா், சுமதி, செந்தமிழ்ச் செல்வி,ஜெயந்தி, ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, ரேவதி உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com