‘மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்
By DIN | Published On : 06th February 2021 10:49 PM | Last Updated : 06th February 2021 10:49 PM | அ+அ அ- |

கரூா்: மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்றாா் பாஜக மாநில விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக விவசாய அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான ஏராளமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன . புதிய வரிகள் இல்லாமல் கரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் விவசாயம் , கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 137 சதவீதம் அதிகம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களுடன் விவசாயக் கடன் ரூ.16.5 லட்சம் கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. ஜவுளித்துறையில் அதிக அளவு முதலீடுகளை ஈா்ப்பதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மெகா முதலீட்டு ஜவுளி பூங்காக்கள் , மித்ரா திட்டம் என்ற பெயரில் அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் ஏழு ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவா் கே.சிவசாமி, விவசாய அணியின் மாவட்டத் தலைவா் அண்ணாவி, பொதுச் செயலாளா்கள் மோகன், நகுலன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...