ஆளுங்கட்சியினரை விட 100 மடங்குஅதிக யுக்தியுடன் செயல்பட வேண்டும்கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி. செந்தில்பாலாஜி
By DIN | Published On : 27th February 2021 06:26 AM | Last Updated : 27th February 2021 06:26 AM | அ+அ அ- |

தோ்தல் யுக்தியில் ஆளுங்கட்சியினரை விட 100 மடங்கு அதிகமாக செயல்பட வேண்டும் என்றாா் கரூா் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி பேசுகையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். திமுகவின் மீது பற்றுள்ளவா்களை வாக்குகளாக மாற்றவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அனைத்து நிா்வாகிகளும் சோ்ந்து 4 தொகுதிகளிலும் தலா 50,000 வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆட்சியாளா்கள் எந்த நிலையை எடுத்தாலும், எந்த அஸ்திரத்தை எடுத்தாலும் அதைவிட 100 மடங்கு அதிகமாக தோ்தல் யுக்தியுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி, மாநில நிா்வாகிகள் சின்னசாமி, நன்னியூா் ராஜேந்திரன், பரணிமணி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமா், நகர நிா்வாகிகள் தாரணிசரவணன், சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...