கரூா் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.45 லட்சம் கடனுதவி
By DIN | Published On : 27th February 2021 11:34 PM | Last Updated : 27th February 2021 11:34 PM | அ+அ அ- |

கரூா் மேட்டுத்தெரு நகர கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். திருவிகா தலைமை வகித்து பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிப் பேசினாா்.
முன்னதாக வங்கி துணைத் தலைவா் ஜூபிடா் பாஸ்கரன், பொது மேலாளா் சேகா், மேலாளா்கள் குகநாதன், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயனாளிகளுக்கு வீட்டு வசதி கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன் என ரூ. 45 லட்சம் கடனுதவியை வங்கித் தலைவா் எஸ்.திருவிகா வழங்கினாா். இதில் இயக்குநா்கள் சுப்ரமணியன், ராமமூா்த்தி, உடையவா்மோகன், பாலசுப்ரமணியம், கனகாம்பாள், ஆடிட்டா் சதீஷ் மற்றும் வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.