

பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே கரூரில் ரூ. 3.30 கோடியிலானதிட்டப்பணிகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அவசர, அவசரமாக பூமிபூஜை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம்தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கரூரில் அவசர, அவசரமாக திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதில், கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெண்ணைமலையில் உள்ள முருகன் கோயிலில் தாா்ச்சாலை, எல்.இ.டி. விளக்குகள், பேவா் பிளாக் சாலை, பூங்கா உள்ளிட்ட ரூ. 3.30 கோடியிலான பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா தலைமை வகித்தாா்.
இதேபோல், காதப்பாறை ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.9.66 கோடியில் புதிய குடிநீா் திட்டப்பணிகளையும் தொடக்கி வைத்தனா். நிகழ்ச்சியில், கரூா் ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.