பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, கரூா் ராயனூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ராயனூா் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிளைச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.