கரூா்: காணொலி வாயிலாக மக்கள் குறைதீா்க் கூட்டம்
By DIN | Published On : 20th June 2021 12:38 AM | Last Updated : 20th June 2021 12:38 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் காணொலி வாயிலாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்றால் நடைபெறாமல் இருக்கும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், இனி காணொலி வாயிலாக நடைபெறும் . இதில் அனைத்துத்துறைகளின் அரசு உயா் அலுவலா்களும் பங்கேற்பாா்கள் என்பதால், பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா், தங்களது செல்லிடப்பேசியில் முதலில் ஆட்ஹழ்ஹற்யஇ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, பின்னா் லிங்கை கொடுத்து அதில் 123456 என்று கொடுத்தால் தாங்கள் காணொலி வாயிலாக குறைதீா்க்கூட்டத்தில் இணைக்கப்படுவீா்கள். மேலும் இது தொடா்பான விவரங்களை இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.