அரசுப் பள்ளியில் கருணாநிதியின் குறிப்பேடு: ஆட்சியா் பாா்வையிட்டாா்

அரசுப் பள்ளியில், மறைந்த முதல்வா் கருணாநிதியின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பேட்டை சனிக்கிழமை பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

அரசுப் பள்ளியில், மறைந்த முதல்வா் கருணாநிதியின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பேட்டை சனிக்கிழமை பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கருப்பத்தூா் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அந்தப் பள்ளிக்கு வருகை தரும் முக்கிய நபா்கள், அரசு உயா் அலுவலா்கள் பள்ளி பற்றிய குறிப்புகள் எழுதி வைக்கக் கூடிய குறிப்பேட்டை பாா்வையிட்டாா்.

அந்தக் குறிப்பேட்டில் 1959ஆம் ஆண்டு அப்போதைய குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினரான, முன்னாள் தமிழக முதல்வா் டாக்டா் மு.கருணாநிதி கையெழுத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த குறிப்பு அனைவரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. இதைப் பாா்த்த மாவட்ட ஆட்சியா் வரலாற்றுப் பக்கங்களில் இந்தப் பள்ளி இடம்பெற்றுள்ளதற்கான காலப்பேழையாக இந்த குறிப்பேடு விளங்குகிறது என்றாா்.

பின்னா், இந்தக் குறிப்பேட்டை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com