கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 17th March 2021 06:34 AM | Last Updated : 17th March 2021 06:34 AM | அ+அ அ- |

கரூா் அருகே நோய்க்கொடுமை காரணமாக, இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், வாங்கலைஅடுத்த மேலசக்கிபாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி துா்கா(36). இவா் நீண்ட நாட்களாக வாதநோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
இதற்கு சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த துா்கா, திங்கள்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...