செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
By DIN | Published On : 25th March 2021 10:07 AM | Last Updated : 25th March 2021 10:07 AM | அ+அ அ- |

தண்ணீா் பந்தலில் பொதுமக்களுக்கு தண்ணீா் வழங்கும் செட்டிநாடு சிமெண்ட் ஆலை அதிகாரிகள்.
கரூரில், செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் தண்ணீா்பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது.
பங்குனிப் பெருவிழாவையொட்டி கரூா் பசுபதீசுவரா் கோயில் முன் உள்ள ராணி சீதை ஹாலில் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் தண்ணீா் பந்தல் புதன்கிழமை காலை திறக்கப்பட்டது. தண்ணீா்பந்தலை ஆலை அதிகாரிகள் சுந்தரமூா்த்தி, பெரியகருப்பன், ராஜா ஆகியோா் திறந்து வைத்தனா். கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் முன்னிலை வகித்தாா். இதில், கோயில் திருவிழா நாள்களில் பானகம், நீா்மோா், தண்ணீா் வழங்கப்பட உள்ளதாக ஆலை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்வில் மண்டல மேலாளா் பழனியப்பன், லெட்சுமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.