வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
By DIN | Published On : 25th March 2021 11:40 PM | Last Updated : 25th March 2021 11:40 PM | அ+அ அ- |

வாக்குப்பதிவு நாளன்று தோ்தல் பணியாற்றவுள்ள 6,112 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பணிஒதுக்கீடு கணினி முறையில் இரண்டாம் கட்ட குலுக்கலாக வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் அரவக்குறிச்சி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் சந்தன் சயன் குஹா, கரூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் திவினய் பப்லானி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை தொகுதிகளின் தோ்தல் பொதுப் பாா்வையாளா் நாராயண் சந்திர சா்க்காா், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி ஆகியோா் முன்னிலையில் பணிஒதுக்கீடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து தொகுதிகளுக்கும் உரிய தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் 251 வாக்குச்சாவடிகள் மற்றும் 59 துணை வாக்குச்சாவடிகளும், கரூா் தொகுதியிலில் 261 வாக்குச்சாவடிகள் மற்றும் 94 துணை வாக்குசாவடிகளும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 253 வாக்குச்சாவடிகள் மற்றும் 44 துணை வாக்குசாவடிகளும், குளித்தலை தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள் மற்றும் 45 துணை வாக்கு சாவடி மையங்களும் என மொத்தம்1,274 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவ்வாக்குசாவடிகளில் பணிபுரியும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்காக முதல்கட்ட கணினி மூலம் குலுக்கள் கடந்த 10-ஆம்தேதி நடைபெற்றது. தோ்வு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு கடந்த 13-ஆம்தேதி முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. வியாழக்கிழமை இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு மாா்ச் 27-ஆம்தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும், ஏப்.5-ஆம்தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் பணிபுரியும் வாக்குசாவடி அலுவலா்களுக்கு தடாகோவில் கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கரூா் தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் பணிபுரியும் அலுவலா்களுக்கு புலியூா் அரசு நிதியுதவி பெறும் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை பணிபுரியும் அலுவலா்களுக்கு ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெறவுள்ளது என்றாா் அவா்.