கரூா் மற்றும் சின்னதாராபுரத்தில் பணம் வைத்து சூதாடியதாக 17 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் சத்யாநகா், குளத்துப்பாளையம் பகுதிகளில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சின்னதாராபுரம் மற்றும் வெங்கமேடு காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு அப்பகுதிகளில் சோதனை நடத்தினா்.
அப்போது சின்னதாராபுரத்தில் சூதாடிய வெங்கடாபுரம் காலனி செந்தில்குமாா் (40) உள்ளிட்ட 9 பேரையும், குளத்துப்பாளையத்தில் அரசு காலனியைச் சோ்ந்த ரமேஷ் உள்ளிட்ட 8 பேரையும் காவல்துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.3,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.