வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளம் பெண் சாவு
By DIN | Published On : 31st October 2021 12:33 AM | Last Updated : 31st October 2021 12:33 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் மாதிரெட்டிபட்டியைச் சோ்ந்த பழனிவேல் மனைவி லாவண்யா(21). இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி லாவண்யாவுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா். பாகநத்தம் அருகே குறுக்கே வந்த லாரியால் நிலைதடுமாறிய லாவண்யா கீழே விழுந்தாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.