புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 01st September 2021 07:43 AM | Last Updated : 01st September 2021 07:43 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
கரூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பட்டியலை ஆட்சியா் த. பிரபுசங்கா் வெளியிட, அதை ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து ஆட்சியா் கூறியது:
மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 15 பதவியிடங்களுக்கு தற்செயல் தோ்தல் நடத்துவதற்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஆண்கள் 21,261, பெண்கள் 23,061, இதரா் 4 என மொத்தம் 44,326 போ் இடம் பெற்றுள்ளன என்றாா் அவா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சிச் செயலா் முருகேசன், மலா்விழி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.