கரூா் மாவட்டத்தில் மழை-விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 04th September 2021 01:42 AM | Last Updated : 04th September 2021 01:42 AM | அ+அ அ- |

கடந்த 1-ஆம்தேதி மாவட்டம் முழுவதும் 74.40 மி.மீ. மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.
விடிய, விடிய தூறலுடன் மழை பெய்துகொண்டே இருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)-கரூா் -65, அரவக்குறிச்சி-10, அணைப்பாளையம் -37, க.பரமத்தி-51, குளித்தலை-9, தோகைமலை-10, கிருஷ்ணராயபுரம்-27, மாயனூா்-30, பஞ்சப்பட்டி-28.2, கடவூா்-16, பாலவிடுதி-13.2, மைலம்பட்டி-9 என மாவட்டத்தில் மொத்தம் 305.40 மி.மீ. மழை பெய்தது.