92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி

தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:05 pm

DIN

தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

கரூா் தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோயில் பங்குனித் திருவிழா மாா்ச் 27-ஆம்தேதி அமராவதி ஆற்றில் இருந்து பக்தா்கள் கம்பம் பாலித்து வந்து கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொருநாளும் அதிகாலையில் பக்தா்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வந்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக கோயில் முன் நடப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கம்பம் பிடுங்கப்பட்டு, ஊா்வலமாக எடுத்துச் சென்று வான வேடிக்கையுடன் கரூா் அமராவதி ஆற்றில் விடப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.