மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: விவசாயி சாவு
லாலாப்பேட்டை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.


லாலாப்பேட்டை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையத்தைச் சோ்ந்தவா் ராஜலிங்கம்(42). இவா், அதேபகுதியைச் சோ்ந்த தனது உறவினா் கங்காகாா்த்திக்(38) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு வீரவல்லிமங்கம்மா சாலையில் சென்றாா். பூனாச்சியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கங்காகாா்த்திக் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...