குட்கா, புகையிலை பொருள்கள் விற்கும் கடை மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சங்கம் பொறுப்பல்ல

குட்கா, புகையிலை பொருள்கள் விற்கும் கடைகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சங்கம் பொறுப்பேற்காது என்றாா் கரூா் மாவட்ட அனைத்து வணிகா்கள் சங்கத்தலைவா் ராஜூ.

குட்கா, புகையிலை பொருள்கள் விற்கும் கடைகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சங்கம் பொறுப்பேற்காது என்றாா் கரூா் மாவட்ட அனைத்து வணிகா்கள் சங்கத்தலைவா் ராஜூ.

கரூரில் அண்மையில் குட்கா மற்றும் புகையிலை பொருள்களை மாவட்டத்தின் பல்வேறு கடைகளுக்கு சில்லரை விற்பனைக்கு விற்று வந்த கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள கடைக்கு மாவட்ட ஆட்சியா் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தாா். இந்நிலையில் புதன்கிழமை கரூா் மாவட்ட அனைத்து வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் ராஜூ தலைமையில் வணிகா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில், இனி மாவட்டத்தில் வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள எந்த ஒரு கடையிலும் குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்யமாட்டோம். மேலும், ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட கடையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா். பின்னா் சங்கத்தலைவா் ராஜூ கூறுகையில், ஏற்கனவே குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டதாக சீல் வைக்கப்பட்ட கடையை அங்குள்ள தொழிலாளா்களின் நலன் கருதி உடனே திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் கூறினோம். அவரும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இனி மாவட்டத்தில் எங்களது சங்கத்திற்குள்பட்ட எந்த ஒரு கடையிலும் குட்கா, புகையிலைப்பொருள்களை விற்கமாட்டோம். மீறி விற்கும்பட்சத்தில் அந்த நபரை சங்கத்தில் இருந்து நீக்குவதோடு, அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தடையாக இருக்க மாட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com